மத்திய அரசு ராகுல் காந்தியைக் கண்டு பயப்படுகிறது - சஞ்சய் ராவத் தாக்கு

கடந்த 4-ம் தேதி ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்திவைத்தது. ராகுல் காந்திக்கு மத்திய அரசு பயப்படுகிறது என சஞ்சய் ராவத் கூறினார்.
மத்திய அரசு ராகுல் காந்தியைக் கண்டு பயப்படுகிறது - சஞ்சய் ராவத் தாக்கு
Published on

மும்பை:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவதூறு வழக்கில் சூரத் கோர்ட்டு 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 4-ம் தேதி ராகுல் காந்திக்கு சூரத் கோர்ட்டு வழங்கிய தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வைத்தது.

இதையடுத்து, ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை ரத்து செய்து எம்.பி. பதவியை உடனடியாக வழங்க வேண்டும் என காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ராகுல் காந்தி விவகாரம் தொடர்பாக உத்தவ் தாக்கரே சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறுகையில், ராகுல் காந்தியை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேகம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு அதை ரத்து செய்வதில் இல்லை. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு வந்து 3 நாட்கள் ஆகிவிட்டது. ஆனாலும் சபாநாயகர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை ரத்து செய்யவில்லை. மத்திய அரசு ராகுல் காந்திக்கு பயப்படுகிறது. எனவே அவரின் தகுதி நீக்கத்தை ரத்துசெய்து எம்.பி. பதவியை வழங்காமல் உள்ளது என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com