ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பதவியேற்றார் சஞ்சய் மல்ஹோத்ரா

ரிசர்வ் வங்கியின் மூத்த ஊழியர்கள் வரவேற்றனர். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.
ரிசர்வ் வங்கியின் 26வது ஆளுநராக பதவியேற்றார் சஞ்சய் மல்ஹோத்ரா
Published on

ரிசர்வ் வங்கியின் 26-வது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பதவியேற்றுக்கொண்டார். இன்று (டிசம்பர் 11) காலை மத்திய தலைமையகத்திற்கு வந்த சஞ்சய் மல்ஹோத்ராவை ரிசர்வ் வங்கியின் மூத்த ஊழியர்கள் வரவேற்றனர்.

சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்ற போது துணை நிலை ஆளுநர்கள் சுவாமிநாதன், ராஜேஸ்வர ராவ், சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஐஏஎஸ் அதிகாரியான மல்ஹோத்ரா ரிசர்வ் வங்கியின் தலைமைப் பொறுப்பில் மிக முக்கியமான கட்டத்தில் பொறுப்பேற்று இருக்கிறார். இவரது பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும்.

முன்னதாக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்த சக்திகாந்த தாஸ் பதவிக்காலம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com