பட்டப்பகலில் துணிகரம்: வங்கிக்குள் புகுந்து ரூ.12 லட்சம் கொள்ளை

அமிர்தசரஸ் நகரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.
பட்டப்பகலில் துணிகரம்: வங்கிக்குள் புகுந்து ரூ.12 லட்சம் கொள்ளை
Published on

அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் தனியார் வங்கி ஒன்று உள்ளது. நேற்று காலை இந்த வங்கி வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் துப்பாக்கியுடன் வங்கிக்குள் நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டி ரூ.12 லட்சத்தை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com