ஏடிஎம்-ல் நிரப்ப காரில் கொண்டு சென்ற ரூ.25 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை

கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.சம்பவ இடத்தில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை என தகவல்.
ஏடிஎம்-ல் நிரப்ப காரில் கொண்டு சென்ற ரூ.25 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை
Published on

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப காரில் கொண்டு சென்ற ரூ.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காரில் பணத்துடன் சென்றவரை கட்டி வைத்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

ஆனால், சம்பவ இடத்தில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த போலீசார், பாதிக்கப்பட்ட நபர் உள்பட 2 ஊழியர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர், "பர்தா அணிந்திருந்த பெண் கும்பல், காரில் லிப்ட் கேட்டு ஏறியதாகவும், தன் மீது மிளகாய் பொடியை தூவி, ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றதாகவும்" போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com