ஆந்திராவில் லாரி மோதியதால் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 6 பேர் பலி

கடப்பாவை சேர்ந்த 6 பேர் நேற்று மாலை அன்னமய்யா மாவட்டம், ராய்சோட்டிக்கு காரில் சென்றனர்.எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது.
ஆந்திராவில் லாரி மோதியதால் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 6 பேர் பலி
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலம், கடப்பாவை சேர்ந்த 6 பேர் நேற்று மாலை அன்னமய்யா மாவட்டம், ராய்சோட்டிக்கு காரில் சென்றனர். அவர்கள் சென்ற கார் ராய் சோட்டி குவ்வள செருவு மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிரே வேகமாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியது. லாரி மோதியதில் 50 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்து கார் நொறுங்கியது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 6 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இதுகுறித்து தகவல் அறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்தவர்களின் பிணங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com