கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு

கேஆர்எஸ் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு 2.20 லட்சம் கன அடி நீர் திறப்பு
Published on

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தமிழகத்திற்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கேஆர்எஸ் அணையில் இருந்து ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கபினி அணையில் இருந்து 50 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், காவிரி கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஒரு லட்சத்து 40 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.

காலை ஒரு லட்சம் கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 1.40 லட்சமாக அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com