

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் என்று அழைக்கப்படுகிறது.
நிதிச்சூழலுக்கு ஏற்ப இந்த வட்டி விகிதத்தை மாற்றுவது குறித்து ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூடி ஆலோசிக்கும்.
அந்த வகையில் 2026-27 நிதியாண்டுக்காக ஜூன் 3 முதல் 5 வரை மூன்று நாட்கள் நிதிக்குழு கூட்டம் கூட்டப்பட்டது.
இன்று கூட்டத்தின் பின் ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை, ரெப்போ வட்டி விகிதம் 5.25%மாக தொடரும் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.
மேற்காசிய போரால் எரிபொருள், எண்ணெய் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியப் பொருளாதாரத்தின் மீதான பணவீக்க அபாயங்களை உணர்ந்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நடப்பு 2026-27 நிதி ஆண்டிற்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 6.6% ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.