தேதி குறிச்சிக்கோங்க..! நாள் முழுக்க இலவச பயணம் அறிவித்த ரேபிடோ

தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது.நாளை வரை 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேதி குறிச்சிக்கோங்க..! நாள் முழுக்க இலவச பயணம் அறிவித்த ரேபிடோ
Published on

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 30-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

தேர்தல் பிரசாரம் வருகிற 28-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் நேற்று முதல் தொடர்ந்து 3 நாட்களுக்கு தேசிய தலைவர்கள் தெலுங்கானாவில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கானா மாநித்தில் தேர்தலின்போது வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்கு செல்லும் மக்களுக்கு, இலவசமாக பைக் சேவையை வழங்க உள்ளதாக ரேபிடோ நிறுவனம் அறிவித்துள்ளது.

தெலுங்கானா சட்டசபை தேர்தலில், வாக்களிப்பை அதிகரிக்கவும், பொது மக்களின் சிரமங்களை குறைக்கவும் ஐதராபாத்தில் உள்ள மையங்களுக்கு இந்த சேவையை வழங்க உள்ளதாக இணை நிறுவனர் பவன் குண்டுபலி தகவல் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com