பாலியல் பலாத்காரம் செய்து கொலை: எரியும் மகள் சிதையில் குதித்து தந்தை தற்கொலை முயற்சி

கண்ணீர் மல்க சோகத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென எரியும் சிதையில் குதித்தார்.லேசான தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பாலியல் பலாத்காரம் செய்து கொலை: எரியும் மகள் சிதையில் குதித்து தந்தை தற்கொலை முயற்சி
Published on

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பில்வாரா கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த வாரம் ஒரு கும்பலால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது இறுதி சடங்கு மயானத்தில் நடந்தது. அந்த பெண்ணின் உடல் எரியூட்டப்பட்டது.

அந்த சமயம் மகளின் சிதை அருகே கண்ணீர் மல்க சோகத்தில் நின்று கொண்டிருந்த அவரது தந்தை திடீரென எரியும் சிதையில் குதித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை உடனே வெளியே இழுத்து காப்பாற்றினார்கள்.

இதில் லேசான தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகள் இறந்ததில் இருந்து அவர் மனம் உடைந்து காணப்பட்டதாகவும், இதனால் அவர் துக்கம் தாங்காமல் இந்த விபரீத முடிவை எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com