மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க முடிவு: மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்

மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.மேலும் 6 மாதங்களுக்கு அங்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க முடிவு: மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றம்
Published on

புதுடெல்லி:

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் கடந்த பிப்ரவரி 13-ம் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு பாராளுமன்றம் ஏப்ரல் 2-ம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்த ஒப்புதலுக்கான காலக்கெடு ஆகஸ்டு 13-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இதற்கிடையே, 6 மாதத்துக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், மணிப்பூரில் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்க மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு அவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மணிப்பூர் மாநிலத்தில் முழுமையாக அமைதி திரும்பி இருக்கிறது. நிரந்தர அமைதியை ஏற்படுத்த இனக்குழுக்கள் இடையே பேச்சுவார்த்தைக்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com