சட்டவிரோத மதுவிற்பனை குறித்து புகார் செய்த நபர்- காலில் ஆணி அடித்து சித்ரவதை

ராஜஸ்தான் போலீசார் 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
அம்ராராம் கோதாரா
அம்ராராம் கோதாரா
Published on

பார்மர்:

ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளரான அம்ரராம் கோதாரா, அப்பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தார். 

இதையடுத்து நேற்று முன்தினம் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட அவர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். மர்மநபர்கள் அவரது கை, கால்களை இரும்பு கம்பியால் அடித்து உடைத்துள்ளனர். காலில் ஆணி அடித்து சித்ரவதை செய்துள்ளனர். அதன்பின் அவர் இறந்து விட்டதாக கருதிய மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி சென்றுவிட்டனர். உயிருடன் இருந்த அம்ராராம் பொதுமக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில போலிசார் 4 தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com