காந்தி நினைவு தினம்: உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் பாத யாத்திரை தற்போது பீகாரில் நடைபெறுகிறது. மகாத்மா காந்தி படத்துக்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
காந்தி நினைவு தினம்: உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய ராகுல் காந்தி
Published on

பாட்னா:

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையின் 2-ம் கட்டத்தை கடந்த 14-ம் தேதி மணிப்பூரில் தொடங்கினார்.

பல்வேறு மாநிலங்கள் வழியாக அசாம் வந்த அவரது யாத்திரை, அதன்பின் மேற்கு வங்காளத்திற்குள் நுழைந்தது. இதையடுத்து, தற்போது மேற்கு வங்காளத்தில் இருந்து பீகாருக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், பீகாரில் இன்று 2-வது நாளாக யாத்திரை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

பீகாரின் அராரியா பகுதியில் காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப் படத்துக்கு ராகுல் காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்கு நடக்கும் பேரணியில் இன்று ராகுல் உரையாற்றுகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com