டெல்லி- தோகா கத்தார் ஏர்வேஸ் விமானம் கராச்சியில் அவசரமாக தரையிறக்கம்

பயணிகளின் அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் அவர்களின் பயணத்திற்கு உதவப்படும் என்றும் கத்தார் ஏர்வேஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
விமானம் (கோப்புப்படம்)
விமானம் (கோப்புப்படம்)
Published on

டெல்லியில் இருந்து இன்று தோகோவிற்கு இன்று காலை புற்பட்ட கத்தார் ஏர்வேஸ் விமான நிலையத்திற்கு சொந்தமான விமானம் கராச்சிக்கு திருப்பிவிடப்பட்டது.

கத்தார் ஏர்வைஸ் நிறுவனத்தின் QR579 விமானம் இன்று காலை டெல்லியில் இருந்து தோகா புறப்பட்டு சென்றது. விமானம் சென்று கொண்டிருக்கும்போது திடீரென கார்கோ அறையில் இருந்து புகை வந்ததால் உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார்.

இதனால் விமானம் கராச்சி விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு விமானம் பாதுகாப்பான வகையில் தரையிறக்கப்பட்டது. அந்த விமானத்தில் 100-க்கும் மேற்பட்ட விமானிகள் இருந்தார்.

பயணிகளின் அசௌகரியத்திற்கு வருத்தம் தெரிவிக்கிறோம். அவர்களின் பயணத்திற்கு உதவப்படும் என கத்தார் ஏர்வேஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com