தாயின் தகாத உறவை எதிர்த்த 15 வயது சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட பயங்கரம்

அவரை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.
தாயின் தகாத உறவை எதிர்த்த 15 வயது சிறுமி தீ வைத்து எரிக்கப்பட்ட பயங்கரம்
Published on

பஞ்சாப் மாநிலத்தில் நவன்ஷஹர் நகரின் கர்சங்கர் பகுதியில் வசித்து வருபவர் உஷா ராணி.

இவரது 15 வயது மகள் கடந்த மே 29 காணாமல் போனார். தான் வீட்டில் இல்லாத நேரத்தில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது மகளைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்திச் சென்றுவிட்டதாக உஷா ராணி போலீசில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், உஷா ராணியின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவரான குர்விந்தர் சிங் (23) என்பவர் சிறுமியை கொலை செய்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

சிறுமியின் தாய் உஷா ராணிக்கும் இடையே தகாத இருந்து வந்துள்ளது. அவர்களின் உறவை சிறுமி கடுமையாக எதிர்த்து வந்துள்ளார். இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த மே 29 அன்று சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த குர்விந்தர் சிங், அங்கு சென்று சிறுமியை கழுத்தை நெரித்துக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார்.

கொலைக்குப் பிறகு, சிறுமியின் சடலத்தை ஒரு பெரிய சூட்கேசில் அடைத்துள்ளார். பின்னர், அந்த சூட்கேஸை தனது பைக்கின் பின்னால் கட்டிக்கொண்டு அடர்ந்த காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று அதை தீ வைத்து எரித்துள்ளார்.

அவர் அளித்த தகவல் அடிப்படையில் காட்டுப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்த காவல்துறையினர் சிறுமியின் எலும்புக்கூட்டின் எச்சங்களை மீட்டனர். அவை டிஎன்ஏ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com