தீவிரமடைந்த போராட்டம் - 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய NTA!

வினாத்தாள் கசிவுகளுக்கு தண்டனையை அதிகரிக்கும் வரைவு மசோதாவிற்கு மத்திய அமைச்சரை ஒப்புதல் வழங்கியுள்ளது.
தீவிரமடைந்த போராட்டம் - 47 அதிகாரிகளை கூண்டோடு தூக்கிய NTA!
Published on

நீட் வினாத்தாள் கசிவு சர்ச்சையைத் தொடர்ந்து, கல்வித்துறையில் மறுசீரமைப்புகளை மேற்கொள்ளும் ஒரு பகுதியாக, தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளை கூண்டோடு பணிநீக்கம் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

“தேசிய தேர்வு முகமை 47 அதிகாரிகளைப் பணியிலிருந்து நீக்கியுள்ளது. இவர்களில் சில அதிகாரிகள் மீது சட்ட மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்படும். வினாத்தாள் கசிவு சர்ச்சையில் சிக்கியுள்ள NTA-வின் முழுமையான சீரமைப்பின் ஒரு பகுதியே இது.” என ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைமையில் நாடு தழுவிய மாணவர் போராட்டம் நடைபெற்று வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நீட், ஜேஇஇ, க்யூட் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

வினாத்தாள் கசிவு வரைவு மசோதா

வினாத்தாள் திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு இனி ரூ.10 கோடி அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கும் வரைவு மசோதாவிற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

வரும் திங்கள்கிழமையன்று மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கலாகவும் உள்ளது.

அனுமதிக்கப்பட்ட 39 பணியிடங்களில் 24 நிரந்தர ஊழியர்கள், 73 ஒப்பந்த ஊழியர்கள், 124 வெளிப்பணியாளர்களை வைத்து தேசிய தேர்வு முகமை இயங்கி வருவதாக நேற்று முன்தினம் மத்திய கல்வி அமைச்சகம் மக்களவையில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com