ரூபாய் மதிப்பு சரிவு: பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என பிரியங்கா கோரிக்கை

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்துள்ளது.இதுகுறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி கூறினார்.
ரூபாய் மதிப்பு சரிவு: பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என பிரியங்கா கோரிக்கை
Published on

புதுடெல்லி:

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவு சரிந்து வருகிறது.

ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 86.04 என உள்ளது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பதும், இந்திய பங்குச்சந்தைகளில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேறுவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதற்கு காரணம் என வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு மிக குறைந்த அளவை எட்டியுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக ஒரு டாலரின் மதிப்பு 86.4 ரூபாயாக மாறியுள்ளது.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது டாலரின் மதிப்பு 58-59 ரூபாயாக இருந்த போது ரூபாயின் மதிப்பை ஒன்றிய அரசின் கவுரவத்துடன் இணைத்து மோடி பேசினார். தனக்கு எல்லாம் தெரியும். எந்த ஒரு நாட்டின் கரன்சியும் இப்படி விழமுடியாது என்று மோடி பேசினார். இன்று அவரே பிரதமராக உள்ளார். ரூபாயின் மதிப்பு சரிவில் அனைத்து சாதனைகளும் முறியடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து நாட்டு மக்களுக்கு அவர் பதிலளிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com