வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி

பிரதமர், சபாநாயகர் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலிஎதிர்க்கட்சி தலைவர்களுக்கும் முதன்முறையாக பா.ஜனதா அழைப்பு
வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி
Published on

இந்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ந்தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் உள்ள வாஜ்பாய் நினைவிடத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித் ஷா, மத்திய மந்திரி பியூஷ் கோயல் உள்ளிட்ட தலைவர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

பா.ஜனதா தலைவர்களை தவிர கூட்டணி கட்சி தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர். முதன்முறையாக பா.ஜனதா கட்சி சார்பில், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியை அல்லாத ஒருவர் பிரதமர் பதவிக்கான ஐந்தாண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்த பிரதமர் வாஜ்பாய் ஆவார்.

இவர் 1996-ம ஆண்டு மே மாதம் 16-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரைக்கும், அதன்பின் 1998-ம் ஆண்டு மார்ச் 19-ந்தேதி முதல் 2004 மே 22-ந்தேதி வரைக்கும் பிரதமராக இருந்துள்ளார். மொராஜி தேசாய் அரசில் 1977 முதல் 1979 வரை வெளியுறவுத்துறை இணை மந்திரயாக இருந்துள்ளார்.

பிரதமர் மோடி பிரதமரானபின், பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. வாஜ்பாய் பிறந்த தினமான டிசம்பர் 25-ந்தேதி, ஒவ்வொரு வருடமும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. 

X

Maalai Malar
www.maalaimalar.com