நாளை வாக்கு எண்ணிக்கை: டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணி

கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 350 இடங்களை தாண்டும் என கணிப்பு.கருத்து கணிப்பிற்கு நேர் எதிராக முடிவுகள் இருக்கும் என காங்கிரஸ் நம்பிக்கை.
நாளை வாக்கு எண்ணிக்கை: டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணி
Published on

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பா.ஜனதா 350 இடங்களுக்கு மேல் பிடிக்கும் என கருத்துக் கணிப்பு நடத்திய அனைத்து நிறுவனங்களும் கணித்துள்ளன. இதனால் பா.ஜனதா தலைவர்கள், தொண்டர்கள் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

அதேவேளையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தேர்தல் கருத்துக் கணிப்பு முற்றிலும் நேர் எதிராக தேர்தல் முடிவுகள் இருக்கும். நாங்கள் 295 இடங்களில் வெற்றி பெறுவோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.

இதனால் காங்கிரஸ் கட்சி தலைவரும், தொண்டர்களும் வெற்றி கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கையை தொடர்ந்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தொண்டர்கள் கூடுவார்கள். மேலும், தலைவர்கள் தலைமை அலுவலகத்தில் பேட்டியளிப்பார்கள்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com