திருப்பதிக்கு நடந்து சென்று பிரகலாத் ஜோஷி சாமி தரிசனம்: முதல்-மந்திரி பதவிக்காக வேண்டுதலா?

திருப்பதிக்கு படிக்கட்டுகளில் ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.
திருப்பதிக்கு நடந்து சென்று பிரகலாத் ஜோஷி சாமி தரிசனம்: முதல்-மந்திரி பதவிக்காக வேண்டுதலா?
Published on

பெங்களூரு :

கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று (சனிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் பா.ஜனதாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறி இருந்தாலும், இந்த தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்போம் என்று அக்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்திருந்தார். இதற்காக ஏழுமலையானை நடந்து சென்று அவர் தரிசனம் செய்திருந்தார். அதாவது கீழ் திருப்பதியில் இருந்து மேல் திருப்பதிக்கு படிக்கட்டுகளில் ஏற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், முதல்-மந்திரி பதவிக்காக திருப்பதி ஏழுமலையானை நடந்து சென்று பிரகலாத் ஜோஷி தரிசனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகத்தில் பா.ஜனதா வெற்றி பெற்றால் பிரகலாத் ஜோஷிக்கு முதல்-மந்திரி பதவி வழங்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக, குமாரசாமி கூறி இருந்தார். இதற்கு பா.ஜனதா தலைவர்களும் பிரகலாத் ஜோஷிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தனர். ஆனால் பிரதமர் மோடிக்கு கீழ் மத்திய மந்திரியாக இருக்கவே தான் விரும்புவதாக பிரகலாத் ஜோஷி கூறி இருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com