உணவக உரிமையாளர்களின் பெயரை கேட்கும் காவல்துறை - அகிலேஷ் யாதவ் கண்டனம்

உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும்.சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உணவக உரிமையாளர்களின் பெயரை கேட்கும் காவல்துறை - அகிலேஷ் யாதவ் கண்டனம்
Published on

உத்தரபிரதேசத்தில் உள்ள கன்வர் யாத்ரா வழித்தடத்தில் உள்ள உணவகங்களின் உணவு விற்பனை செய்பவர்களின் பெயர்கள் மற்றும் பணியாளர்களின் பெயர்களைக் காண்பிக்க வேண்டும் என்ற முசாபர்நகர் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச அரசின் இந்த நடவடிக்கை முஸ்லிம் கடைக்காரர்களை பாதிக்கும் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

காவல்துறையின் இந்த உத்தரவை எதிர்த்து தானாக முன்வந்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "கடை உரிமையாளரின் பெயர் என்னவாக இருந்தால் என்ன? பெயரை வைத்து நீங்கள் கண்டுபிடிக்க போகிறீர்கள்?. மாநிலத்தின் அமைதியான சூழலையும் நல்லிணக்கத்தையும் கெடுப்பதற்கான இத்தகைய உத்தரவு ஒரு சமூக குற்றம்" என்று தெரிவித்துள்ளார்.

அதே போல், "பாஜக அரசின் இந்த உத்தரவு முட்டாள்தனமானது. சட்டத்திற்குப் புறம்பான இந்த உத்தரவு இஸ்லாமியர்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டும் நடவடிக்கையாகும்" என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com