குருநானக் ஜெயந்தி கொண்டாட்டம் - பிரதமர் மோடி இன்று உரை...

2001-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் குருத்வாரா சேதமடைந்தது. அதை சரி செய்ய அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி அவசர முயற்சிகளை மேற்கொண்டார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

காந்திநகர்:

குஜராத்தில் இன்று நடைபெறவுள்ள குருநானக் ஜெயந்தி கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 முதல் டிசம்பர் 25-ம் தேதி வரை குஜராத்தில் உள்ள சீக்கிய சங்கத்தினர், சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர். இந்த ஆண்டு நடைபெற்று வரும் கொண்டாட்டத்தில் கலந்துக்கொள்ளவுள்ள பிரதமர் மோடி காணொலியின் மூலம் இன்று உரையாற்றவுள்ளார். 

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

குருநானக் தனது பயணத்தின்போது குஜராத்தில் உள்ள லக்பத்தில் தங்கியிருந்தார். அவர் பயன்படுத்திய மர காலணி, தொட்டில் மற்றும் அவர் எழுதிய கையெழுத்து பிரதிகள் ஆகியவை நினைவுச் சின்னங்களாக லக்பத்தில் உள்ள குருத்வாராவில் வைக்கப்பட்டுள்ளன. 2001-ம் ஆண்டு ஏற்பட்ட நில நடுக்கத்தில் குருத்வாரா சேதமடைந்தது. அதை சரி செய்ய அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் மோடி அவசர முயற்சிகளை மேற்கொண்டார். இந்த நடவடிக்கை பிரதமர் மோடி, குருநானக் மீது வைத்துள்ள நம்பிக்கையின் ஆழ்ந்த மரியாதையை காட்டுகிறது. மேலும் அவர் சீக்கிய குருமார்களுக்கு பல வகைகளில் மரியாதையை செலுத்தியுள்ளார்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com