ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வரும் 20ம் தேதி இந்தியா வருகை

ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறார்.வரும் 20ம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வரும் 20ம் தேதி இந்தியா வருகை
Published on

புதுடெல்லி:

ஜி7 மற்றும் ஜி20 ஆகிய அமைப்புகளின் மாநாடு நடக்க இருக்கிறது.

இந்நிலையில், வரும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகை தருகிறார்.

இந்தப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கார் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார்.

பிரதமர் சந்திப்பின்போது இருதரப்பு பரஸ்பரம், ஒத்துழைப்பு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து ஜப்பான் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com