சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்- பிரதமர் மோடி

இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து harghartiranga.com தளத்தில் பகிர கேட்டுக்கொள்கிறேன்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுங்கள்- பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி:

இந்திய சுதந்திர தினம் வருகிற 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக பிரதமர் மோடி ஊக்குவித்து வருகிறார். 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி' என்ற இந்த பிரசாரத்தை இந்த ஆண்டும் மேற்கொள்ளுமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார். இதன் ஒரு பகுதியாக தனது எக்ஸ் தளத்தின் முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்து இருக்கிறார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், 'சுதந்திர தினம் நெருங்கி வரும் நிலையில் 'ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி' என்ற பிரசாரத்தை மீண்டும் ஒரு மக்கள் இயக்கமாக மாற்றுவோம். எனது எக்ஸ் தள முகப்பு படமாக தேசியக்கொடியை வைத்து இருக்கிறேன். நீங்களும் அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் தேசியக்கொடியுடன் செல்பி எடுத்து harghartiranga.com தளத்தில் பகிரவும் கேட்டுக்கொள்கிறேன்' என கேட்டுக்கொண்டு இருந்தார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் மற்றும் பிற நிறுவனங்களில் தேசியக்கொடி ஏற்றுமாறும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com