பிரதமர் மோடி ஆந்திராவில் இன்று மாலை பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு

ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.
பிரதமர் மோடி ஆந்திராவில் இன்று மாலை பொதுக்கூட்டங்களில் பங்கேற்பு
Published on

திருப்பதி:

ஆந்திர மாநிலத்தில் இன்று மாலை 2 இடங்களில் நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்கிறார்.

இதற்காக அவர் ராஜ மகேந்திரவரம் விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். மதியம் 3.30 மணிக்கு ராஜ மகேந்திரவரம் தொகுதியில் உள்ள வேமகிரி என்ற இடத்தில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் மோடி பேசுகிறார்.

இதில் சந்திரபாபு நாயுடு, பவன் கல்யாண் மற்றும் அந்த தொகுதியின் வேட்பாளர் புரந்தேஸ்வரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து அனக்கா பள்ளியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. வேட்பாளர் சி.எம். ரமேஷை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி ஆந்திராவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஆந்திராவில் வருகிற 13-ந் தேதி வாக்குப்பதிவுக்கு முன்பாக தொடர்ந்து 4 பொதுக் கூட்டங்களில் மோடி பேச உள்ளதாக பா.ஜ.க.வினர் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com