தேயிலை தோட்டங்களின் அழகை ரசித்த பிரதமர் மோடி

அசாம் மாநிலம் சென்ற பிரதமர் மோடி ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார்.இதுதொடர்பான புகைப்படங்களை பிரதமர் எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
தேயிலை தோட்டங்களின் அழகை ரசித்த பிரதமர் மோடி
Published on

கவுகாத்தி:

பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று அசாம் மாநிலம் சென்றார். அங்குள்ள ஒரு தேயிலை தோட்டத்தைப் பார்வையிட்டார். தேயிலை தோட்டத்தில் சிறிது நேரம் தனது நேரத்தைச் செலவிட்டார்.

இந்தப் பயணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பிரதமர் தனது எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரதமர் மோடி கூறுகையில், அசாம் அதன் அற்புதமான தேயிலை தோட்டங்களுக்கு பெயர் பெற்றது. அசாம் தேநீர் உலகம் முழுவதும் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால், நீங்கள் அசாம் செல்லும்போது இந்த தேயிலை தோட்டங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என சுற்றுலாப் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com