அவசர நிலை பிரகடனத்தின்போது காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது - பிரதமர் மோடி

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாட்களில் மக்களின் அடிப்படை உரிமை, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது.அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சாதாரண குடிமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அவசர நிலை பிரகடனத்தின்போது காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது - பிரதமர் மோடி
Published on

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

இந்திய வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.

அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட நாட்களில் மக்களின் அடிப்படை உரிமை, பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், சாதாரண குடிமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவசர நிலையின்போது காங்கிரஸ் அரசு ஜனநாயகத்தை கைது செய்தது போல இருந்தது.

அவசர நிலையின் இருண்ட நாட்களை நினைவில் வைத்திருப்பவர்கள் அல்லது அந்தக் காலத்தில் துன்பப்பட்ட குடும்பங்கள் தங்கள் அனுபவங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இது 1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலம் இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

X

Maalai Malar
www.maalaimalar.com