பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் வாங்சுக் சந்திப்பு

பூடான் மன்னர் வாங்சுக் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
பிரதமர் மோடியுடன் பூடான் மன்னர் வாங்சுக் சந்திப்பு
Published on

புதுடெல்லி:

பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் பூடான் ராணி ஜெட்சன் பெமா வாங்சுக் மற்றும் பூடான் அரசாங்கத்தின் மூத்த அதிகாரிகளும் வந்தனர்.

டெல்லி வந்தடைந்த பூடான் மன்னரை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வரவேற்றார். அவர்களுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பூடான் மன்னர் வாங்சுக் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை தனித்தனியாக சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பின்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது மற்றும் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com