தைவான் நிலநடுக்க பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்

தைவான் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
தைவான் நிலநடுக்க பலி எண்ணிக்கை 9 ஆக உயர்வு: பிரதமர் மோடி இரங்கல்
Published on

புதுடெல்லி:

தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகி இருந்தது.

இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. 730 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலநடுக்கம் சீனா, ஹாங்காங், ஜப்பான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளிலும் உணரப்பட்டது.

இந்நிலையில், தைவானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தைவானில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலர் உயிரிழந்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் வேண்டுகிறேன் என பதிவிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com