

பிரபல மலையாள நடிகர் சலீம் குமார் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார்.
தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் சலீம் குமாரின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார்.
அதோடு, இந்திய சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய பன்முகத் திறமை கொண்ட கலைஞர் என்றும் அவரை நினைவு கூர்ந்தார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி மேலும் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மூத்த நடிகர் சலீம் குமார் அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது புகழ்பெற்ற திரைப்பயணத்தில், அவர் தனது பன்முகத்தன்மையாலும், பல்வேறு வேடங்களில் வழங்கிய மறக்கமுடியாத நடிப்பாலும் முத்திரை பதித்தார். இந்தத் துயர நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் எண்ணற்ற ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.