தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடைவிதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு

சந்திரா பாண்டே என்ற தேர்தல் ஆணையர் கடந்த மாதம் ஓய்வு பெற்றார்.நேற்று முன்தினம் அருண் கோயல் ராஜினாமா செய்தார்.
தேர்தல் ஆணையர்களை நியமிக்க தடைவிதிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் மனு
Published on

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். இவருக்கு அடுத்தப்படியாக அருண் கோயல் மற்றும் சந்திரா பாண்டே ஆகியோர் இருந்தனர்.

சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இதனால் இரண்டு ஆணையர்களுடன் இயங்கி வந்தது. இரண்டு ஆணையர்களும் தேர்தல் தேதியை அறிவிப்பதற்கான பணிகளை துரிதமாக செய்து கொண்டிருந்தனர். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் அருண் கோயல் நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதனால் தலைமை தேர்தல் ஆணையர் மட்டுமே உள்ளார். அவர் ஒரு நபராக இருந்து தேர்தலை நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

இந்த விவகாரத்தால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட தாமதம் ஏற்படலாம் எனத் தெரிகிறது. இதற்கிடையே வருகிற 15-ந்தேதி பிரதமர் மோடி தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறார்.

இந்த நிலையில் மத்திய அரசால் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்படுவதற்கு தடைவிதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில் 2023 நீதிமன்ற தீர்ப்பின்படி தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com