மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி கவலைக்கிடம்

2008-ம் ஆண்டு நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கில் மதானிக்கு தொடர்பு இருக்கிறது.மதானி உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி கவலைக்கிடம்
Published on

திருவனந்தபுரம்:

கேரளாவில் உள்ள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி (வயது58). கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அவர், 9 ஆண்டுகளுக்கு பிறகு அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு நடந்த பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருக்கிறது. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மூச்சு விட சிரமப்படுவதால், அவருக்கு வென்டிலேட்டர் உதவுயுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com