பஸ்சில் சீட் கிடைக்காததால் கண்டக்டரின் கன்னத்தை கடித்த வாலிபர் ரத்தம் கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சி

ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஸ்சில் சீட் கிடைக்காததால் கண்டக்டரின் கன்னத்தை கடித்த வாலிபர் ரத்தம் கொட்டியதால் பயணிகள் அதிர்ச்சி
Published on

தெலுங்கானா மாநிலம், அடி சுந்தரவாடா பஸ் நிலையத்தில் இருந்து உட்னூர் நோக்கி அரசு பஸ் சென்று கொண்டு இருந்தது. இந்த பஸ்சில் கான் என்ற கண்டக்டர் பணியில் இருந்தார்.

அப்போது அன்ஸ்னாபூரை சேர்ந்த அசிம் கான் என்பவர் பஸ்சில் ஏறினார். அவர் கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கினார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அசிம்கானுக்கு சீட் கிடைக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அசிம்கான் கண்டக்டரிடம் தகராறு செய்தார். பணத்தை திருப்பித் தருமாறு கேட்டார்.

இதையடுத்து கண்டக்டர் பணத்தை திருப்பி கொடுத்து அசின் கானை பஸ்சிலிருந்து கீழே இறக்கினார்.

அப்போது அசிம் கான் கண்டக்டரை தாக்கினார். அவரை கீழே தள்ளி கன்னத்தைக் கடித்து துப்பினார்.

இதில் கண்டக்டரின் கன்னத்தில் இருந்து ரத்தம் கொட்டியது. இதனைக் கண்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அசிம் கானை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com