வந்தே பாரத் ரெயிலின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அவதி - வீடியோ

இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது.
வந்தே பாரத் ரெயிலின் மேற்கூரையில் இருந்து  தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் அவதி - வீடியோ
Published on

டெல்லியில் இருந்து வாரணாசிக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலில் மேற்கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து இந்த பிரச்சனை குறித்து பல பயணிகள் புகார் அளித்தனர்.

இந்த புகார் தொடர்பாக வடக்கு ரெயில்வே தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளது. அதில், குழாய்களில் ஏற்பட்ட அடைப்புகளில் இந்த நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம். பயணிகளின் சிரமத்திற்கு வருந்துகிறோம் என்று பதிவிட்டுள்ளது.

இருப்பினும் ரெயிலில் நீர் ஒழுகும் இந்த வீடியோவை இணையத்தில் பகிர்ந்து நெட்டிசன்கள் ரெயில்வேத்துறையின் அலட்சியத்தை விமர்சித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com