என் மலர்
இந்தியா

மகளின் கல்விக் கட்டணத்தை செலுத்த தங்கள் பாலியல் காட்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்த பெற்றோர் கைது
- மூத்த மகள் பி.டெக் படிக்கிறார். இரண்டாவது மகள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காத்திருக்கிறார்.
- படம்பிடித்து பதிவேற்றியதற்காக அவர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டது. தவிர நேரடி ஒளிபரப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்பட்டது.
தெலுங்கானா மாநிலம் அதிராபாத்தில் ஒரு தம்பதியினர் தங்கள் மகளின் கல்லூரி கட்டணத்தை செலுத்துவதற்காக பாலியல் காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டனர்.
இந்த தம்பதியினர் தங்கள் இரண்டு மகள்களின் கட்டணத்தை செலுத்த சிரமப்பட்டனர். மூத்த மகள் பி.டெக் படிக்கிறார். இரண்டாவது மகள் பள்ளிக்கல்வி முடித்து உயர்கல்வி படிக்க காத்திருக்கிறார். இந்நிலையில் தங்கள் குழந்தைகளின் கல்விச் செலவுகளைச் சமாளிக்க முடியாததால், பெற்றோர் மொபைல் செயலி மூலம் தங்கள் இருவரின் அந்தரங்க காட்சிகளை ஒளிபரப்பி பணம் ஈட்டியுள்ளனர்.
சிறுமிகளின் தந்தை ஆட்டோரிக்ஷா ஓட்டுநராக இருப்பதால், தற்போது உடல்நலக்குறைவு காரணமாக வேலைக்குச் செல்ல முடியவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். வீடியோவைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்பட்ட கேமராக்கள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இந்தக் காட்சிகளைப் படம்பிடித்து பதிவேற்றியதற்காக அவர்களுக்கு ரூ.500 சம்பளம் வழங்கப்பட்டது. தவிர நேரடி ஒளிபரப்புக்கு ரூ.2,000 வசூலிக்கப்பட்டதாகபோலீசார் தெரிவித்தனர். உளவுத்துறை அறிக்கைகளின் அடிப்படையில் அவர்களின் வீடு சோதனை செய்யப்பட்ட பின் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.






