ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கையை உருவாக்க ரூ.95,344 செலவானதாக மத்திய அரசு தகவல்

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதாவுக்கு மொத்தம் 269 உறுப்பினர்கள் ஆதரவும், 198 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
ஒரே நாடு ஒரே தேர்தல் அறிக்கையை உருவாக்க ரூ.95,344 செலவானதாக மத்திய அரசு தகவல்
Published on

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 2 ஆம் தேதி முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது.

இந்த குழுவில் தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய அமைச்சர் அமித் ஷா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங், முன்னாள் மக்களவைச் செயலாளர் டாக்டர். சுபாஷ் சி. காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த குழு, 2024 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி தனது அறிக்கையை மத்திய அரசிற்கு சமர்ப்பித்தது. இதனையடுத்து, 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 17, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மசோதாவுக்கு மொத்தம் 269 உறுப்பினர்கள் ஆதரவும், 198 உறுப்பினர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' அறிக்கையை உருவாக்குவதற்கு மத்திய அரசு ரூ.95,344 செலவிட்டதாக சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்தியா டுடே சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக இந்த விவரங்கள் வெளியிடப்பட்டன.

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு 194 நாட்களில் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளது. அப்படியென்றால் ஒருநாளைக்கு 491 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

கமிட்டி உறுப்பினர்களுக்கு பணம் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் உறுப்பினர்கள் கவுரவ அடிப்படையில் அறிக்கைக்கு பங்களித்ததாக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com