3 மாநிலங்களில் புதிய தொற்று அதிகரிப்பு- இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 170 ஆனது

டெல்லியில் இன்று 6 பேருக்கும், கேரளாவில் 4 பேருக்கும், கர்நாடகாவில் 5 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை
Published on

புதுடெல்லி:

இந்தியாவில் ஒமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. முதலில் கர்நாடக மாநிலம் பெங்களூரில் டாக்டர் உள்பட 2 பேருக்கு முதன் முதலில் ஒமைக்ரான் கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், டெல்லி, கேரளா, ஆந்திரா, சண்டிகர், தெலுங்கானா, மேற்கு வங்காளம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் ஒமைக்ரான் பரவி உள்ளது. 

குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. டெல்லியில் இன்று 6 பேருக்கும், கேரளாவில் 4 பேருக்கும், கர்நாடகாவில் 5 பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நிலவரப்படி, நாடு முழுவதும் ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 170 ஆக உயர்ந்தது. அதிகபடச்மாக மகாராஷ்டிராவில் 54 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. டெல்லியில் 28, தெலுங்கானாவில் 20, ராஜஸ்தானில் 17, கர்நாடகாவில் 19, கேரளாவில் 15, குஜராத்தில் 11, உத்தர பிரதேசத்தில் 2, ஆந்திரா, சண்டிகர், தமிழ்நாடு, மேற்கு வங்காளத்தில் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com