ஒமைக்ரான் அச்சுறுத்தல்: உள்நாட்டு விமான பயணிகளுக்கும் கட்டுப்பாடு விதிப்பு

ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக உள்நாட்டு பயணிகளுக்கும் கட்டுப்பாடு விதித்துள்ளது இந்திய விமான ஆணையம்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன. இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தாலும் டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழகம் என முக்கியமான மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகள் மட்டுமே விமான நிலையத்தில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் தற்போது  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பயணம் செய்யும் விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம், தெர்மல் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட வேண்டும். 72 மணி நேரத்திற்குள்ளான கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என இந்திய விமான ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற விமான நிலையங்களில் உள்நாட்டு விமானிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com