‘தேர்தலுக்கு பின் அழுது பிரயோஜனமில்லை... சமாஜ்வாதியுடன் கூட்டணிக்கு தயார்’ - ஓவைசி அழைப்பு!

அகிலேஷ் யாதவும், ஓவைசியும் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவதில் போட்டியிடுகிறார்கள்.
‘தேர்தலுக்கு பின் அழுது பிரயோஜனமில்லை... சமாஜ்வாதியுடன் கூட்டணிக்கு தயார்’ - ஓவைசி அழைப்பு!
Published on

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைக்கத் தயார் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார்.

பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் நீடிப்பதை தான் விரும்பவில்லை என்றும், ஓட்டுகள் பிரிவதை தவிர்ப்பதற்காகவே சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மொராதாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ஓவைசி.,

“இதை நான் முன்பே கூறியுள்ளேன், மீண்டும் கூறுகிறேன்: உத்தரப் பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைப்பதை மஜ்லிஸ் விரும்பவில்லை. நான் கைகோர்க்கத் தயார். நான் கூட்டணி அமைக்கத் தயார். பேசுவதற்கான நேரம் இது. தேர்தல் முடிந்த பிறகு அழ வேண்டாம். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை.

ஓவைசி போட்டியிடுவது நமக்குத் தீங்கு விளைவிக்கும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நான் உங்களுடன் இணைந்து போராடத் தயார். எங்கள் போராட்டம் எங்கள் கௌரவத்திற்கான போராட்டம். எங்கள் போராட்டம் நீதிக்கான போராட்டம். இப்போது நாங்கள் சும்மா உட்கார்ந்திருக்க விரும்பவில்லை. இப்போது எங்களுக்கு சமத்துவம் வேண்டும்.

அகிலேஷ் ஒரு நாற்காலியில் அமர்ந்தால், ஓவைசி அந்த நாற்காலிக்கு முன்னால் சம்மணமிட்டு அமர்ந்து உரிமைகள் மற்றும் நீதி பற்றிப் பேசுவார்.” என்று கூறினார்.

ஓவைசியின் இந்த அழைப்பு விமர்சித்துள்ள பாஜக, இருவரும் நாணயத்தின் இரு பக்கங்கள். அகிலேஷ் யாதவும், ஓவைசியும் ஒருவரையொருவர் திருப்திப்படுத்துவதில் போட்டியிடுகிறார்கள். இன்று அவர்கள், 'யார் பெரிய அண்ணா?' என்ற போட்டியை ஒதுக்கிவிட்டு, 'அண்ணா கூட்டணி அமைப்போம்' என்கிறார்கள்.

ஓவைசி, அகிலேஷ் யாதவ்வுக்கு ஃபிரண்ட் ரிக்வஸ்ட் கொடுத்துள்ளார் என விமர்சித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com