மகன் விபத்தில் இறந்ததால் கேரளாவில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெகருன்னிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலப்புழாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
டாக்டர் மெகருன்னிசா.
டாக்டர் மெகருன்னிசா.
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் பகுதயை சேர்ந்தவர் ஷபீக் ரகுமான். இவரது மனைவி மெகருன்னிசா (வயது48). இவர் மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

இவர்களது மூத்த மகன் பென்யாமின் கனடா நாட்டில் உயர்கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் அங்கு நடந்த கார் விபத்தில் சிக்கி பெய்னாமின் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்தது குறித்து ஆலப்புழாவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது.

விபத்தில் மகன் இறந்த தகவலைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மகனின் இறப்பை மெகருன்னிசாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மெகருன்னிசா தூக்கு போடுதவற்கு முன்னதாக தனது தோழி ஒருவரிடம் போனில் பேசி, தனது மகன் இறந்துவிட்டதால் தனக்கு வாழ விரும்பமில்லை என்று கூறியிருக்கிறார். அதுபற்றி அவர், மசூதிக்கு சென்றிருந்த மெகருன்னிசாவின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனால் பதட்டமடைந்த அவர் தனது இளைய மகனுடன், மசூதியில் இருந்து வீட்டுக்கு அவசரஅவசரமாக வந்திருக்கிறார். அவர் வீட் டுக்கு வந்து பார்த்த போது மெகருன்னிசா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து காயம்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெகருன்னிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த துக்கத்தில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலப்புழாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com