

டெல்லியில் காவலர்கள், போராட்டக்காரர்கள் இடையே நேற்று நள்ளிரவு மீண்டும் வெடிதுள்ளது.
நீட் உள்ளிட்ட தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலமையில் கடந்த ஜுன் 20 முதல் இளைங்கர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன்ர்.
இதில் கல்வியாளர் சோனம் வாங்சுக் கடந்த 25 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த சனிக்கிழமை அவர் டெல்லி போலீசாரால் வலுகட்டாயமாக தூக்கிச் செல்லபட்டு மருத்துவமனையில் அனுமதிகபட்டார்.
இதனிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான கடந்த ஜுலை 20, திங்கள்கிழமை, நாடாளுமன்றம் நோக்கி இளைஞர்கள் நடத்திய பேரணியை கலைக்க போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர் புகைகுண்டுகளை பயன்படுத்தியும் தாக்குதல் நடத்தினர்.
இதில் போராட்டகாரர்கள் 60 பேர் காயமடைந்தனர். குறிப்பாக இளம் பெண் ஒருவர் வென்டிலேட்டர் சிகிச்சை பெறும் சூழல் ஏற்பட்டது. அவர் உடல்நிலை தற்போது சீரடைந்து வருவதாக மருதுவர்கள் தெரிவிதுள்ளனர்.
சிஜேபி போராட்டம் ஜந்தர் மந்தரில் தொடர்ந்து வரும் சூழலில் அருகில் உள்ள சன்சத் மார்க்மற்றும் கனாட் பிளேஸ் பகுதிகளில் நேற்று இரவு போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
சன்சத் மார்க்கில் உள்ள பார்க் ஹோட்டல் அருகே திரண்ட போராட்டக்காரர்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றதால், கூட்டத்தைக் கலைக்கக் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.
கோபமடைந்த போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதுடன், கனாட் பிளேஸ் பிரதான சாலை வரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.
இந்த வன்முறையில் 2 உதவி ஆணையர்கள், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு ஹெட் கான்ஸ்டபிள் மற்றும் ஒரு கான்ஸ்டபிள் என மொத்தம் 5 காவல்துறையினர் காயமடைந்துள்ளதாக டெல்லி காவல்துறை தெரிவிதுள்ளது.
பதற்றத்தைத் தணிக்க மத்திய டெல்லியின் சில பகுதிகளில் இணையதள சேவைகள் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
அரசின் உத்தரவுப்படி, ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள 1.5 கிலோமீட்டர் சுற்றளவில் நேற்று (புதன்கிழமை) மாலை 6 மணி முதல் இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணி வரை இணையச் சேவைகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டன.
நாடளுமன்றம் அமைந்துள்ள இடத்திற்கு அருகே மத்திய படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டம் வன்முறையாக மாறுவதைத் தடுக்க, சிஜேபி அமைப்பின் தன்னார்வலர்கள் காவல்துறையின் பேருந்துகளின் மீது நின்று ஒலிபெருக்கி மூலம் போராட்டக்காரர்களிடம் அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
மேலும், போராட்டம் நடக்கும் பாதைகளில் கிடந்த கற்களைப் போராட்டக்காரர்கள் எடுத்து வீசாதவாறு, சிஜேபி தொண்டர்களே சாலைகளில் கிடந்த கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளசோனம் வாங்சுக் வெளியிட்ட புதிய வீடியோவில், "போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது அரசு எந்தவித சட்டப்பூர்வ அல்லது பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்காது என உறுதியளித்தால், நான் எனது உண்ணாவிரதத்தை உடனடியாக முடித்துக் கொள்ளத் தயார்" எனக் கூறியுள்ளார்.
இதனிடயே இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மும்பையில் போராட்டம் நடைபெற்ற இடதிற்கு சென்று குரல் எழுப்பிய நடிகை ஆயிஷா கானை மும்பை போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் சென்று காவலில் எடுத்துள்ளனர்.