திருவனந்தபுரத்தில் மோட்டார் சைக்கிள்-பஸ் மோதி விபத்து: 2 வாலிபர்கள் பலி

மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கிழக்கு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர்.
விபத்தில் பலியான வாலிபர்கள்
விபத்தில் பலியான வாலிபர்கள்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள அருவிக்கரை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் ஷிபின் (வயது 18), நிதின் (21). சம்பவத்தன்று இவர்கள், விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்றனர். பழைய போலீஸ் நிலையம் அருகே வந்தபோது அவர்களது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கிழக்கு கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் மீது மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த அவர்கள் அங்கிருந்து மீட்கப்பட்டு திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இருந்த போதிலும் வாலிபர்கள் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்தில் பஸ்சில் வந்த 2 பயணிகளும் காயமடைந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com