இன்ஸ்டாகிராம் காதலனை மணக்க 5 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்

பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட சிறுமியின் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அடையாளம் இருந்தது இடைப்பட்ட காலத்தில் டெல்லியை ராகுல் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது
இன்ஸ்டாகிராம் காதலனை மணக்க 5 வயது மகளின் கழுத்தை நெரித்துக் கொன்ற தாய்
Published on

இன்ஸ்டாகிராமில் காதலித்தவரை திருமணம் செய்துகொள்வதற்காகப் பெற்ற மகளை தாய் கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. வடமேற்கு டெல்லியின் அசோக் விஹாரில் 5 வயது மகளை தாய் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட சிறுமியின் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அடையாளம் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் போலீசார் விசாரணையில் இறங்கினர். வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குழந்தையின் தாய் உட்பட உறவினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

தொடர்ச்சியான விசாரணைக்குப் பிறகு, தாய் தனது மகளை கழுத்தை நெரித்துக் கொன்றதை போலீசிடம் ஒப்புக்கொண்டார். ஹிமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த அந்த பெண் கணவன் கைவிட்டு சென்ற நிலையில் 5 வயது மகளுடன் அங்கு வசித்து வந்துள்ளார்.

இடைப்பட்ட காலத்தில் டெல்லியை ராகுல் என்பவருடன் இன்ஸ்டாகிராமில் அவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. ராகுலை திருமணம் செய்து கொள்ள விரும்பிய அவர் டெல்லிக்கு மகளுடன் இடம் பெயர்ந்தார். ஆனால், ராகுலும் அவரது குடும்பமும் அந்த பெண்ணின் குழந்தையை ஏற்க மறுத்துள்ளனர்.

எனவே திருமணத்துக்குத் தடையாக இருந்த தனது 5 வயது மகளை அந்த பெண் குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்நிலையில் அந்த பெண் மீது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com