மகனின் நோயை குணப்படுத்த 13 வயது மகளை நரபலி கொடுத்த தாய் | Jharkhand

துர்காஷ்டமி அன்று நரபலி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. பூஜை நடப்பதாகக் கூறி சிறுமியை சாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மகனின் நோயை குணப்படுத்த 13 வயது மகளை நரபலி கொடுத்த தாய் | Jharkhand
Published on

ஜார்க்கண்டில் மகனின் நோயைக் குணப்படுத்துவதற்காக தனது 13 வயது மகளைப் பலியிட்ட தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்டின் ஹசாரிபாக் மாவட்டத்தில் உள்ள குசும்பா கிராமத்தில் மார்ச் 24 அன்று இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது.

கிராம மக்கள் ராம நவமியைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது சிறுமி காணாமல் போனதாகவும், மறுநாள் காலை பள்ளிக்கு அருகிலுள்ள மூங்கில் காட்டில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்தது.

அதனைத் தொடர்ந்து, சிறுமியின் சிறுமியின் 35 வயது தாய் ரேஷ்மி தேவியின் அளித்த புகாரின் பேரில், தனேஷ்வர் பஸ்வான் என்ற பக்கத்து வீட்டுகாரர் மீது காவல்துறை போக்சோ வழக்குப் பதிவு செய்தது.

இருப்பினும், காவல்துறையின் விசாரணை வேறு ஒரு திருப்பத்தை எடுத்தது. தாயின் வாக்குமூலத்தில் இருந்த முரண்பாடுகளை வைத்து போலீசார் உண்மையை கண்டறிந்துள்ளனர்.

ரேஷ்மி தேவியின் மகனுக்கு நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக் குறைபாட்டைத் தீர்க்கவும், குடும்பப் பிரச்சினைகளை முடிக்கவும் ஒரு கன்னிப் பெண்ணை நரபலி கொடுக்க வேண்டும் என்று அந்த ஊரை சேர்ந்த பெண் சாமியார் சாந்தி தேவி கூறியுள்ளார்.

கணவனை இழந்த ரேஷ்மி தேவி, பீம் ராம் என்பவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். தனது காதலனுடன் சேர்ந்து மகளை நரபலி கொடுக்க ரேஷ்மி தேவி திட்டம் தீட்டியுள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக இதற்கான ஏற்பாடுகள் நடந்துள்ளன. துர்காஷ்டமி அன்று நரபலி கொடுக்க முடிவு செய்யப்பட்டது. பூஜை நடப்பதாகக் கூறி சிறுமியை சாமியார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

நள்ளிரவில் சிறுமியை அருகிலுள்ள மூங்கில் காட்டிற்கு அழைத்துச் சென்று, பீம் ராம் சிறுமியின் கழுத்தை நெரிக்க, தாய் ரேஷ்மி தேவி கால்களைப் பிடித்துக் கொண்டுள்ளார். சிறுமியின் தலையை மோதி ரத்தத்தை சேகரித்து நரபலி கொடுத்துள்ளனர்.

இது ஒரு பாலியல் வன்கொடுமை கொலை போலக் காட்ட முயற்சி செய்து சிறுமியின் தாய் பக்கத்து வீட்டுக்காரர் மீது பொய்ப் புகார் அளித்து நாடகமாடியுள்ளார். உண்மை வெளிப்பட்ட நிலையில் ரேஷ்மி தேவி, பீம் ராம் மற்றும் சாமியார் சாந்தி தேவியை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com