குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி?- மத்திய அரசு வழிகாட்டுதல் வெளியீடு

இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.கேரளாவில் 5 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குரங்கு அம்மை நோய்
குரங்கு அம்மை நோய்
Published on

புதுடெல்லி:

உலக அளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாக பரவி வருகிறது.

இந்தியாவில் இதுவரை 8 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவில் 5 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் குரங்கு அம்மையில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவரை மற்றவர்களிடம் இருந்து தனிமைப்படுத்த வேண்டும்.

* இரு கைகளையும் அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும் அல்லது கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

* குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அருகில் இருந்தால் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிய வேண்டும்.

* குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் படுக்கைகள், துணிகள், பொருட்களை பயன்படுத்தக்கூடாது.

* நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் துணிகளை, பாதிக்கப்படாதவர்களின் துணிகளுடன் சேர்த்து துவைத்தல் கூடாது.

* குரங்கு அம்மை அறிகுறி இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க கூடாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதுவரை 75 நாடுகளில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com