மோடியின் பூடான் பயணம் திடீரென ஒத்திவைப்பு

மோடி நாளை பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, இம்மாத துவக்கத்தில் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார்
மோடியின் பூடான் பயணம் திடீரென ஒத்திவைப்பு
Published on

பிரதமர் நரேந்திர மோடி நாளை பூடானுக்கு 2 நாள் அரசுமுறை பயணம் மேற்கொள்வார் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த பயணத்தின் போது, பிரதமர் மோடி, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் மற்றும் அவரது முன்னோடி ஜிக்மே சிங்யே வாங்சுக் ஆகியோரை சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், பிரதமர் மோடி ஷெரிங் டோப்கேயுடனும் பேச்சுவார்த்தை நடத்துவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக பிரதமரின் பூட்டான் பயணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, பூடான் பிரதமர் ஷேரிங் டோப்கே, இம்மாத துவக்கத்தில் அரசுமுறை பயணமாக இந்தியா வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com