நாட்டு மக்களுக்கு மோடி கொடுத்தது வெற்று சொம்புதான்: சித்தராமையா

இந்த முறை கர்நாடகா அல்லது நாடு முழுவதும் மோடி அலை இல்லை. மோடி பெயரில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.அவர்கள் மோடியை சார்ந்து இருக்கிறார்கள். மோடி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை வீசுகிறது.
நாட்டு மக்களுக்கு மோடி கொடுத்தது வெற்று சொம்புதான்: சித்தராமையா
Published on

கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா கூறியதாவது:-

இந்த முறை கர்நாடகா அல்லது நாடு முழுவதும் மோடி அலை இல்லை. மோடி பெயரில் பா.ஜனதா வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர். அவர்கள் மோடியை சார்ந்து இருக்கிறார்கள். மோடி அரசுக்கு எதிராக வலுவான எதிர்ப்பு அலை வீசுகிறது.

கர்நாடகாவிற்கு மோடியின் பரிசு வெற்றுச் சொம்பு. ஒவ்வொருவருடைய வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாக தெரிவித்திருந்தார்கள். செய்தார்களா? வருடத்திற்கு 2 கோடி வேலை வாய்ப்பை உருவாக்கினார்களா? விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பு ஆக்கினார்களா? நல்ல நாட்கள் வந்ததா?. ஒரு சிங்கிள் உறுதியை கூட நிறைவேற்றவில்லை.

ஆகவே, மோடி மாநில மக்கள் மற்றும் நாட்டு மக்களுக்கு வெற்று சொம்பை கொடுத்துள்ளார். அவர்கள் ஏதும் செய்யவில்லை. இருந்தபோதிலும் நம்முடைய மாநில கஜானா காலியாகவில்லை. நம்முடைய காங்கிரஸ் கட்சி ஐந்து உத்தரவாத திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. முன்னேற்றத்திற்கான பணிகளை தொடர்கிறோம். மதசார்பற்ற ஜனதா தளம் மதவாத கட்சி. அவர்களில் பா.ஜனதா உடன் கூட்டணி வைத்துள்ளது மூலம் கட்சியை கலைத்து விடுவது நல்லது.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com