கடந்த 10 ஆண்டுகளில் உலக நண்பனாக உருவெடுத்த இந்தியா - பிரதமர் பேச்சுக்கு ஜெய்சங்கர் பாராட்டு

டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமர் மோடி ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கது என மத்திய மந்திரிகள் புகழாரம் சூட்டினர்.
கடந்த 10 ஆண்டுகளில் உலக நண்பனாக உருவெடுத்த இந்தியா - பிரதமர் பேச்சுக்கு ஜெய்சங்கர் பாராட்டு
Published on

புதுடெல்லி:

டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி 10-வது தடவையாக தேசிய கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். அப்போது, மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதாக அவர் உறுதிபட தெரிவித்தார். அவரது உரைக்கு மத்திய மந்திரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடியின் உரை உத்வேகம் அளிப்பதாக இருந்தது. சுதந்திர தின நூற்றாண்டு விழாவை நோக்கிய அமிர்த காலத்தில் இந்தியாவின் இலக்குகளை அவர் பட்டியலிட்டார். மக்கள்தொகை, ஜனநாயகம், பன்முகத் தன்மை ஆகிய 3 அம்சங்களை உயர்த்திப் பிடித்தார். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா உலக நண்பன் ஆக உருவெடுத்ததாக தெரிவித்துள்ளார் என கூறியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com