வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ்குமார் கட்சி எம்.பி.க்கள் ராஜினாமா

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளித்தது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய ஜனதா தள எம்.பி.க்கள் 2 பேர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்தனர்.
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு: நிதிஷ்குமார் கட்சி எம்.பி.க்கள் ராஜினாமா
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்தின் மக்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. நீண்ட விவாதத்திற்கு பிறகு, இம்மசோதா நேற்று முன்தினம் நள்ளிரவில் நிறைவேறியது.

இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த மசோதாவிற்கு பா.ஜ.க,வின் கூட்டணி கட்சியான தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.

இந்நிலையில், மசோதாவிற்கு ஆதரவு அளிக்கும் நிதிஷ்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சி எம்.பி.க்கள் முகமது காசிம் அன்சாரி மற்றும் முகமது நவாஸ் மாலிக் ஆகியோர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தனர்.

இதுதொடர்பாக நிதிஷ்குமாருக்கு கடிதம் அனுப்பிய அவர்கள், முஸ்லிம் மக்களின் நம்பிக்கையை நாம் இழந்து விட்டோம் என தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com