5-வது மாடியில் இருந்து குதித்து மருத்துவ மாணவி தற்கொலை!

தீக்ஷிதா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
Medical student suicide attempt
Published on

தெலுங்கானா மாநிலம், மெட்சல் மாவட்டம், கீசரா, மேற்கு காந்தி நகரை சேர்ந்தவர் தீக்ஷிதா (வயது26). இவர் பெங்களூரில் உள்ள மருத்துவ கல்லூரியில் முதுகலை கண் மருத்துவம் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று வீட்டில் இருந்த தீக்ஷிதா திடீரென 5-வது மாடிக்கு சென்றார். அங்கிருந்து கீழே குதித்தார். படுகாயம் அடைந்த தீக்ஷிதா ரத்த வெள்ளத்தில் துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீக்ஷிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com