மகப்பேறு
மகப்பேறு

தென்னிந்தியாவில் மகப்பேறு மரணம் கர்நாடகத்தில் தான் அதிகம்: ஆய்வில் தகவல்

கர்நாடகத்தில் மட்டும் ஒரு லட்சம் பிரசவத்திற்கு 83 மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. கேரளாவில் 30, தெலுங்கானாவில் 56, தமிழ்நாடு, ஆந்திராவில் தலா 58 மகப்பேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
Published on

பெங்களூரு:

இந்தியாவில் கடந்த 2017-19-ம் ஆண்டுகளில் மகப்பேறு மரணம் குறித்த ஆய்வு முடிவுகளை இந்திய மாதிரி பதிவு முறை அமைப்பு கடந்த மார்ச் மாதம் வெளியிட்டது. இந்த ஆய்வில், தென்னிந்தியாவில் தான் மகப்பேறு மரணம் அதிகம் நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது கர்நாடகத்தில் மட்டும் ஒரு லட்சம் பிரசவத்திற்கு 83 மகப்பேறு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது பிரசவத்தின்போதோ அல்லது கர்ப்ப காலத்திலேயே கர்ப்பிணி பெண்கள் இறந்துள்ளனர்.கேரளாவில் 30, தெலுங்கானாவில் 56, தமிழ்நாடு, ஆந்திராவில் தலா 58 மகப்பேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளன.

கர்நாடகத்தில் அதிக மகப்பேறு மரணங்கள் நிகழ்வது குறித்து உப்பள்ளி கர்நாடக மருத்துவ கல்லூரி மகப்பேறு மருத்துவ நிபுணர் கஸ்தூரி டோனிமத் கூறுகையில், "கர்நாடகத்தில் 45.7 சதவீத கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள். மேலும் கர்ப்பிணி பெண்களில் பலருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருக்கிறது. 44.7 சதவீத கர்ப்பிணி பெண்கள் மட்டுமே இரும்பு சத்து மாத்திரைகளை உட்கொள்கிறார்கள். இதுபோன்ற குறைபாடுகளால் தான் கர்நாடகத்தில் மகப்பேறு மரணங்கள் அதிகமாக நிகழ்கின்றன" என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com